காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
கடந்த 2022ம் ஆண்டில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரண்டு வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'சர்தார்'. இதன் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் 2 உருவாகும் என தெரிவித்தனர். இந்த இரண்டாம் பாகத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார் .இதில் கார்த்தி, ராஷி கண்ணா நடிக்கின்றனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
இந்த நிலையில் இதன் படத்தின் பூஜை நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது பான் இந்திய படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளதால் இதில் மற்ற மொழி நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதன் படப்பிடிப்பை 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.