ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
தமிழில் விஜய்சேதுபதியுடன் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை நிஹாரிகா. ஏராளமான தெலுங்கு படத்தில் நடித்துள்ள இவர் சிரஞ்சீவியின் சகோதரரும், நடிகருமான நாகபாபுவின் மகள் ஆவார். நிஹாரிகாவுக்கும், சைதன்யா என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தனது விவாகரத்து குறித்து முதல் முறையாக பேசி இருக்கிறார், நிஹாரிகா. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என் திருமணம் பெற்றோர் நிச்சயம் செய்தது. விவாகரத்து பெற்றபோது என்னை நிறைய பேர் பல விதமாக பேசினார்கள். நிறைய அழுதேன். வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால், எல்லாம் நினைத்த மாதிரி நடக்காது. இதுவும் அப்படித்தான். விவாகரத்து பெற்றதும் எனது கேரக்டரை தவறாக பேசினார்கள். என்னையும், குடும்பத்தினரையும் கேவலப்படுத்தினார்கள். அப்போது தாங்க முடியாமல் அழுதேன்.
ஆனால் என் குடும்பம் என் மீது தவறு சொல்லவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் குடும்பத்தின் மதிப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டேன். யாரையும் நம்பக்கூடாது என தெரிந்து விட்டது. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டேன். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்கிறார் நிஹாரிகா.