விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது | கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை : மகளிர் ஆணையத்தில் சஞ்சனா கல்ராணி புகார் |
தேனி : இளையராஜாவின் மகளும், மறைந்த பாடகியுமான பவதாரிணியின் உடல் தேனி அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதியில் உள்ள இளையராஜாவின் தாயார் மற்றும் மனைவியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி(47) தேசிய விருது பெற்றவர். புற்றுநோய் காரணமாக ஜன., 25ல் இலங்கையில் காலமானார். ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற நிலையில் சிகிச்சை பலன்றின்றி அங்கு காலமானார். நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட பவதாரிணி உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சென்னையில் பிரபலங்கள் அஞ்சலி
மத்திய அமைச்சர் எல் முருகன், தமிழக அமைச்சர் உதயநிதி, திரைப்பிரபலங்களான சிவக்குமார், கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சேரன், லிங்குசாமி, பரத்வாஜ், மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சுஜாதா, ஸ்வேதா மோகன், சூரி, ஆர்.கே செல்வமணி, பேரரசு, பாக்யராஜ், சுஹாசினி, இயக்குனர்கள் எழில், அமீர், ராம், சந்தான பாரதி, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, சுதா, பிரியா, இளன், இசையமைப்பாளர் தினா, பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், ரஹ்மான் மகன் அமீன், மிர்ச்சி சிவா உள்ளிட்ட வெங்கட்பிரபு அணியினர் உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தேனியிலும் பிரபலங்கள் அஞ்சலி
பின்னர் பவதாரிணி உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று இரவு எடுத்துச் சென்றனர். இன்று(ஜன., 27) காலை அவரது உடல் தேனி வந்தது. கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் இளையராஜாவின் உறவினர்களும் தேனி வந்தனர். தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு டிரம்ஸ் சிவமணி, நடிகர்கள் ஜான் விஜய், அபி சரவணன், இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கலங்கிய பாரதிராஜா
இளையராஜாவின் நண்பரும், இயக்குனருமான பாரதிராஜா தேனியில் இருந்தபடி பவதாரிணி உடலுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினார். பவதாரிணியின் உடலை பார்த்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது.
எப்படி ஆறுதல் சொல்ல
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த இளையராஜா பின்னர் கார் மூலம் தேனிக்கு வந்தார். தனது பண்ணை தோட்டத்தில் வைக்கப்பட்ட மகள் பவதாரிணி உடலை பார்த்து கலங்கி போய் இருந்தார். அவருக்கு பாரதிராஜா, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
நல்லடக்கம்பின்னர் பவதாரிணி உடல் சாந்தி அடைய ஓதுவார்கள் மூலம் திருவாசகம் பாடப்பட்டது. அவரது உறவினர்கள் பவதாரிணி பாடி தேசிய விருது வாங்கிய "மயில் போல பொண்ணு ஒன்னு..." பாடலை பாடி வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.