துரந்தர் 2வை உடனே வெளியிடுங்கள் : ஷ்ரத்தா கபூர் வேண்டுகோள் | களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி | ரிலீஸ் பற்றி வாய் திறக்காத 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | இயக்குனருக்கு முதல் முறை கார் பரிசளித்த பவன் கல்யாண் | சிக்ரி சிக்ரி : 100 மில்லியனைக் கடந்த ஏஆர் ரஹ்மானின் முதல் தெலுங்குப் பாடல் | எனக்கு சினிமா பசி அதிகம்: சித்தி இத்னானி | செத்து, பிழைத்தேன்: செல்வராகவன் உருக்கம் | 3 மணி நேரத்திற்கு மேல் ஓடப் போகும் 'ஜனநாயகன்' ? | ஐதராபாத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிலை திறப்பு | கேரள திரைப்பட விழாவில் 19 படங்கள் திடீர் நீக்கம்: ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் |

ஜெயிலர் படத்தை அடுத்து சுந்தர்.சி.,யின் அரண்மனை-4 படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. மேலும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா இந்த ஆண்டில் அவரை திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சமீபகாலமாக அவ்வப்போது ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் தமன்னா தற்போது கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு தனது பெற்றோருடன் சென்று குடும்பத்தோடு வழிபாடு செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள தமன்னா, எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள் என்று பதிவிட்டுள்ளார்.




