நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
'டிக்கிலோனா' படத்திற்குப் பிறகு சந்தானம், இயக்குனர் கார்த்திக் யோகி மீண்டும் இணைந்திருக்கும் படம் 'வடக்குபட்டி ராமசாமி'. இப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த “ஏன்டா டேய், இந்த சாமியே இல்லன்னு சொல்லி ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே, அந்த ராமசாமி நீதான நீ,” என ஒருவர் சந்தானத்திடம் கேட்க, அதற்கு சந்தானம், “நான் அந்த ராமசாமி இல்ல,” என்ற வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பொங்கல் தினத்தில் அந்த வசனத்தை மட்டும் வைத்து சந்தானம் பொங்கல் கொண்டாடிய வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததை அடுத்து அதை நீக்கிவிட்டார். இப்படத்தை ரெட் ஜெயன்ட் எதற்காக வெளியிடுகிறது என்றும் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
இந்நிலையில் இன்று வெளியான ஒரு போஸ்டரில் ரெட் ஜெயன்ட் பெயரும், லோகோவும் நீக்கப்பட்டுள்ளது. முதல் சிங்கிள் அறிவிப்பு பற்றிய போஸ்டர் ஒன்றை சந்தானம் பகிர்ந்துள்ளார். அதில் இன்று மாலை நிறைய ஆச்சரியத்திற்குக் காத்திருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் டேக் செய்யப்படவுமில்லை. அந்நிறுவனமும் இந்த டுவீட்டைப் பதிவிடவில்லை.
இதனால், 'வடக்குபட்டி ராமசாமி' படத்தின் வெளியீட்டிலிருந்து ரெட் ஜெயன்ட் பின் வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அல்லது பெயரில்லாமல் படத்தை வெளியிடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இப்படத்தின் பழைய டுவீட்கள் எதையும் அந்நிறுவனம் இன்னும் நீக்கவில்லை.