நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படம் தொடங்குவதற்கு தாமதமாகி வந்த நிலையில் படம் கைவிடப்பட்டதாககூட தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் படத்தின் முன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக தெரிகிறது.
வரலாற்று படமான இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான '300 வீரர்கள்' படத்தின் படம் பாணியில் முழுக்க முழுக்க அரங்கம் அமைத்து விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தில் தயாராகிறதாம். இதற்கான செட்டுகள் சென்னை புறநகரில் அமைக்கப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் அலுவலகத்தில் கிராபிக்ஸ் வல்லுநர்கள் 30 பேர் கொண்ட குழுவினர் வேலை செய்து வருகின்றனர். துபாயில் இருக்கும் சிம்பு படத்திற்காக வாள் சண்டை, குதிரையேற்ற பயிற்சியில் இருக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்கள் ஒரே ஷெட்யூலில் படம் தயாராகிறது.




