'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் |
'கேஜிஎப்' படங்களின் மூலம் இந்தியத் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் கன்னட இயக்குனர் பிரசாந்த நீல். அவரும் பிரபாஸும் இணைந்த பான் இந்தியா படமான 'சலார்' படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியானது.
அதிக எதிர்பார்ப்புடன் வந்த இப்படம் தெலுங்கு ரசிகர்களை மட்டுமே கவர்ந்தது. மற்ற மொழிகளில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை, சாதனை வசூலும் கிடைக்கவில்லை. 1000 கோடி வசூலைக் கடக்கும் என சிலர் சொன்னதற்கு மாறாக 600 கோடி வசூலை மட்டுமே கடந்ததாகத் தெரிகிறது. விமர்சன ரீதியாக பலத்த விமர்சனங்களைப் படம் பெற்றது. 'கேஜிஎப்' சாயல்தான் படத்தில் அதிகமாக இருந்ததாகப் பலரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் படம் வெளியாகி நான்கு வாரங்கள் ஆகிவிட்டதால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது. ஹிந்தியில் 8 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிட முடியும், அதனால், ஹிந்தியில் வெளியாகவில்லை.
ஓடிடி தளத்தில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.