ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
2023ம் ஆண்டு வெளிவந்த படங்களில் விமர்சன ரீதியாக குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படம் 'பார்க்கிங்'. அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி வெளியான படம்.
டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக இந்தப் படத்தின் வசூல் கொஞ்சம் பாதிக்கப்பட்டது. இல்லையென்றால் அதிகமான வசூலைப் பெற்ற சிறிய படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும். இருப்பினும் அதைக் கடந்து ஓடி நேற்று 50வது நாளை இப்படம் தொட்டிருக்கிறது. வசூல் ரீதியாக லாபகரமான படமாக அமைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
படம் 50 நாளைத் தொட்ட மகிழ்ச்சியில் படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், படத்திற்காக டப்பிங் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, “முதல் நாளிலிருந்தே 'பார்க்கிங்' படத்தை நான் உறுதியாக நம்பினேன். இந்த அற்புதமான வெற்றியின் மூலம் நீங்கள் அனைவரும் என்னை மேலும் நம்ப வைத்துள்ளீர்கள். இந்த வெற்றி உங்கள் அனைவராலும்தான், அனைவருக்கும் நன்றி. எனது குழுவை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்று, வசூலையும் பெற்ற சில படங்களின் வரிசையில் கடைசியாக சேர்ந்த படம் 'பார்க்கிங்'. கடந்த வருடத்தில் வெளியாகி இந்த வருடத்தில் 50வது நாளைத் தொட்டுள்ளது.