நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
ஞானவேல்ராஜா தயாரித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் வரிபிடித்தம் செய்தே வழங்கி உள்ளார் ஞானவேல்ராஜா. ஆனால் பிடித்தம் செய்த தொகையை அவர் வருமானவரித்துறைக்கு கட்டாததால் சிவகார்த்திகேயன் வங்கி கணக்கில் இருந்து 12 லட்சத்தை வருமானவரித்துறை எடுத்துக் கொண்டது.
இதனை எதிர்த்து சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் “நான் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' படத்துக்காக 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா 15 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்டார். 2019ம் ஆண்டு மே மாதம் படம் வெளியான நிலையில், எனது சம்பள தொகையில் வருமான வரியை ஞானவேல் ராஜா பிடித்தம் செய்தார். ஆனால் பிடித்தம் செய்த வரியை வருமான வரித்துறைக்கு செலுத்தவில்லை. இதன் காரணமாக வருமான வரி பிடித்தத்தை எனது வங்கி கணக்கில் இருந்து வருமான வரித்துறை எடுத்துக்கொண்டது. இந்த தொகையை திரும்ப வழங்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயனுக்கு திரும்ப வழங்க வேண்டிய 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.