டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சென்னையில் வருகிற 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை 10 நாட்கள் ஐரோப்பிய திரைப்பட விழா நடக்கிறது. ஐரோப்பிய யூனியன் தூதரகத்துடன் இணைந்து இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு இதனை நடத்துகிறது. அலையன்ஸ் பிரான்சைஸ் ஆப் மெட்ராஸ், எட்வர்ட் மிச்செலின் ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழாவில் 28 ஐரோப்பிய நாடுகளில் இருந்து 25 வெவ்வேறு மொழிகளில் 28 விருதுகளை வென்ற படங்கள் திரையிடப்படுகிறது.
இந்த விழாவில் ஐரோப்பிய பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படங்கள் திரையிடப்படுகிறது. இதில் 18 பெண் இயக்குனர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும். புகழ்பெற்ற இயக்குனர் ஆலிஸ்டியோப் இயக்கிய 'கிராண்ட் பிரிக்ஸ்' விருது வென்ற பிரெஞ்சுத் திரைப்படமான “செயின்ட் ஓமர்” படத்துடன் திரைப்பட விழா தொடங்குகிறது. புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கான பிரான்ஸ் துணை தூதர் டாக்டர் பாட்ரிசியா தெரிஹார்ட் துவக்கி வைக்கிறார். அனுமதி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.




