இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

நயன்தாராவின் 75வது படமான ‛அன்னபூரணி' சமீபத்தில் திரைக்கு வந்தது. இதில் சமையல்கலை நிபுணராக நயன்தாரா நடித்தார். அவருடன் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். தியேட்டரை விட்டு வெளியேறிய இந்தபடம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. மேலும் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார் என்றும், இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நயன்தாரா, ஜெய், இப்படத்தை வெளியிட்டுள்ள நெட் பிளிக்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சிவசேனா தலைவர் ரமேஷ் சோழான்கி என்பவர் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து இப்படத்துக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான அன்னபூரணி படம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சர்ச்சை காட்சிகளை நீக்கும் வரை அப்படத்தை நீக்குவதாக உறுதியளிக்கிறோம் என ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதோடு மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்றது தொடர்பாக படத்தை தயாரித்த ஜீ நிறுவனம் விஷ்வ இந்து அமைப்பிடம் மன்னிப்பு கோரி உள்ளது.




