குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு |
நிசப்தம் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. சில ஆண்டுகளாக நடிகர் ஜெய்யும் அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரேக்கப் செய்து கொண்டார்கள். பின்னர் சென்னையில் உள்ள தனது சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஆந்திராவில் குடியேறிய அஞ்சலி, அங்கு தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்த நேரத்தில் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் அஞ்சலி செட்டிலாகி விட்டதாகவும், படங்களில் நடிப்பதற்காக மட்டுமே அவர் இந்தியா வருவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛சினிமாவில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் நட்பு ரீதியாக பழகினாலும் கூட கிசுகிசு எழுதி வருகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை நான் காதலிப்பதாக செய்தி வெளியிட்டார்கள். அதையடுத்து இப்போது தொழிலதிபரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதாக எழுதுகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக இவர்கள் எழுதுவதை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது. சினிமா நடிகை என்பதால் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று அவர்கள் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார் அஞ்சலி.