நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. நயன்தாரா சமையல் கலை வல்லுனராக நடித்த இப்படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நயன்தாராவை இறைச்சி சாப்பிட வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று ஜெய் கூறுவார்.
இந்த காட்சிக்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் சிவசேனா தலைவர் ரமேஷ் சோழான்கி என்பவர் மும்பை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், இப்படத்தில் நயன்தாரா ஒரு அர்ச்சகரின் மகள். ஆனால் அவர் நமாஸ் செய்கிறார் என்றும், இந்த படத்தில் இந்து மதத்தின் புனிதங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நயன்தாரா, ஜெய், இப்படத்தை வெளியிட்டுள்ள நெட் பிளிக்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரியில் தெரிவித்திருக்கிறார்.