நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
1. தெளிவான திரைக்கதை மூலம் எளிதாக கதை சொல்லி, களிப்புறும் சினிமா தந்த கச்சிதமான இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் 71வது பிறந்த தினம் இன்று…
2. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள வெள்ளாங்கோயில் என்ற சிற்றூரில், கிருஷ்ணசாமி மற்றும் அமராவதி அம்மாள் தம்பதியரின் மகனாக 1953ம் ஆண்டு ஜனவரி 7 அன்று பிறந்தார் இயக்குநர் கே.பாக்யராஜ்.
3. பி யு சி படித்து தேர்ச்சி பெறாத இயக்குநர் கே.பாக்யராஜ், 1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகப் படமான “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் ஒரு உதவியாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
4. தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்” ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்ததோடு, துணை கதாபாத்திரங்களில் நடித்து வெள்ளித்திரையின் வெளிச்சமும் கிடைக்கப் பெற்றார்.
5. இயக்குநர் பாரதிராஜா 1979ம் ஆண்டு வெளிவந்த தனது “புதிய வார்ப்புகள்” திரைப்படத்தின் வசனகர்த்தாவாக பணிபுரிந்து வந்த பாக்யராஜை படத்தின் நாயகனாக்கியும் அழகு பார்த்தார். இயக்குநர் பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமும் இதுவே.
6. இயக்குநராக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்த கே.பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் “சுவர் இல்லாத சித்திரங்கள்”. நடிகர் சுதாகரை படத்தின் நாயகனாக்கி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்ததுடன், நகைச்சுவையோடு கூடிய ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து படத்தின் வெற்றியை சுவைத்தார் இயக்குநர் பாக்யராஜ்.
7. இதனைத் தொடர்ந்து இவரே கதாநாயகனாக நடித்து வெளிவந்த இவரது இரண்டாவது திரைப்படம் 1980ல் வெளிவந்த “ஒரு கை ஓசை”. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருந்ததோடு படத்தை தயாரித்தும் இருந்தார் பாக்யராஜ். வாய் பேச முடியாத நாயகனாக பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
8. பினனர் வந்த இவரது படைப்புகளான “மௌன கீதங்கள்”, “இன்று போய் நாளை வா”, “அந்த 7 நாட்கள்”, “தூரல் நின்னு போச்சு” போன்ற படங்கள் இவரது தனித்துவமான முத்திரையை முழுமையாக வெளிப்படுத்திய மாபெரும் வெற்றிப் படங்களாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
9. இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் போன்ற ஆஸ்தான இயக்குநர்களை கொண்டே படம் தயாரித்து வந்த ஏ.வி.எம் நிறுவனம், முதல் முறையாக பாக்யராஜின் இயக்கத்தில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “முந்தானை முடிச்சு” திரைப்படம்.
10. 1982ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தின் மூலமாக நடிகை ஊர்வசியை நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்யராஜ். முருங்கைக்காய் பிரபலமாக காரணமான இத்திரைப்படம் சென்னை உட்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கண்டது.
11. ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான மதுரை “தங்கம்” திரையரங்கில் எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்களுக்குப் பின் 100 நாட்கள் ஓடிய திரைப்படம் என்றால் அது இயக்குநர் பாக்யராஜ் நடித்து இயக்கியிருந்த “தூரல் நின்னு போச்சு” திரைப்படம்தான்.
12. எம்.ஜி.ஆரால் தனது கலை வாரிசு என அறிவிக்கப்பட்ட இயக்குநர் பாக்யராஜ், சுமதி, பிரவீணா, ரத்தி அக்னிஹோத்ரி, ராதிகா, அஸ்வினி, சரிதா, சுலக்ஷணா, பூர்ணிமா பாக்யராஜ், ராதா, பானுப்ரியா, மீனாட்சி சேஷாத்ரி, ஷோபனா, பிரகதி, ரோகிணி, ஐஸ்வர்யா, நக்மா என ஏராளமான நடிகைகளோடு இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களைத் தந்த ஒரே நடிகர் மற்றும் இயக்குநர் என்ற பெருமைக்குரியவர் இயக்குநர் பாக்யராஜ்.
13. தனது “தாவணிக் கனவுகள்” திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும், தனது குருநாதர் இயக்குநர் பாரதிராஜாவையும் இயக்கியதன் மூலம் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட இயக்குநர் பாக்யராஜ், தனது நண்பரும் நடிகருமான ரஜினிகாந்தை மட்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போனது ஏமாற்றமே.
14. ஒரு கதாசிரியராக, இயக்குநராக, நடிகராக என 85 திரைப்படங்கள் வரை பணிபுரிந்து கலையுலகிற்கு பெருமை தேடித்தந்ததோடு, இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்ற பெருமைக்குரிய இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் நாம் மனம் நிறைவு கொள்வோம்.