சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒரு பிரேக் கொடுத்துள்ளார்கள். இதன் காரணமாக தனது குடும்பத்தாருடன் துபாயில் புத்தாண்டு கொண்டாடிய அஜித் அங்கு தனது மகள் அனோஷ்காவின் 16வது பிறந்தநாளையும் கொண்டாடினார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் அஜித், திரிஷாவின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அர்ஜுன் என்றும், திரிஷாவின் கேரக்டர் பெயர் கயல் என்றும் கூறப்படுகிறது. இதே படத்தில் நடிகர் அர்ஜுனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.