பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேகிறாரா ரவீந்தர்? | பா.விஜய் இயக்கத்தில் ஜீவா- அர்ஜுன் நடிக்கும் 'அகத்தியா' | ஒரு டிரைலரிலேயே முழு படத்தைக் காட்டிய 'சிங்கம் அகைன்' டிரைலர் | 69வது படத்திற்காக விஜய் பின்னணி பாடிய ஒன் லாஸ்ட் சாங்! | மைசூரு தசரா விழாவில் இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | முதன்முறையாக ரீமேக் ; கொள்கையை தளர்த்திய சூர்யா பட தயாரிப்பாளர் | பிரபல தாதாவுடன் தொடர்பு ; போலீசாரின் விசாரணை வளையத்தில் 'பிசாசு' நடிகை? | தினசரி லப்பர் பந்து நாயகியின் காலை தொட்டு வணங்கும் கணவர் | சுந்தரி நடிகைக்கு திடீர் திருமணம் | இயக்குனரின் படமாக இருக்குமா ரஜினியின் 'வேட்டையன்'? |
பொங்கல் போட்டி நேரடி தமிழ்ப் படங்களுடனும், இரண்டு டப்பிங் படங்களுடன் ஆரம்பமாக உள்ளது. 'அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1' ஆகிய நேரடிப் படங்களுடன் டப்பிங் படங்களான 'மெர்ரி கிறிஸ்துமஸ், ஹனுமான்', ஆகிய இரண்டு டப்பிங் படங்களுடன் ஜனவரி 12ம் தேதியும், போட்டியிட உள்ளன.
இவற்றில் நேரடி தமிழ்ப் படங்களில் 'அயலான், கேப்டன் மில்லர்' அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 'மிஷன் சாப்டர் 1, மெர்ரி கிறிஸ்துமஸ், ஹனு மான்' ஆகியவை எஞ்சியுள்ள தியேட்டர்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளன.
பொங்கல் போட்டியை அடுத்து ஜனவரி 25ம் தேதி முக்கியமான வெளியீட்டு நாளாக வர உள்ளது. 25ம் தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறை என தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை தினங்களாக அமையப் போகிறது. எனவே, 25ம் தேதி படத்தை வெளியிட்டால் நான்கு நாட்களில் நல்ல வசூலைப் பார்க்கலாம்.
பொங்கலுக்கு வருவதாக சொல்லப்பட்ட 'லால் சலாம்' 25ல் வரும் என்கிறார்கள். ஆனால், இன்னும் அறிவிப்பு வரவில்லை. இதனிடையே, 25க்கான போட்டியில் 'ப்ளூ ஸ்டார்' படம் சேர்ந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். ஜெயகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி இப்படத்தில் நடித்துள்ளார்கள். உள்ளூர் கிரிக்கெட் போட்டியை மையமாகக் கொண்ட படம் இது.
25ம் தேதிக்கான போட்டியில் ஏற்கெனவே ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் நடிக்கும் 'சிங்கப்பூர் சலூன்' படம் உள்ளது. இப்போது 'ப்ளூ ஸ்டார்' படமும் களத்தில் இறங்கியுள்ளது. இன்னும் யார், யார் களமிறங்க உள்ளார்கள் என்ற அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகலாம்.