வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் |
முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா பெரிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வருகிறது. விஷாலுக்காக தாங்கள் செலுத்திய கடன் தொகையை விஷால் திருப்பித் தரவில்லை என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் லைகா நிறுவனத்தின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று விஷால் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "என்னுடைய விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரித்த சண்டக்கோழி 2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் 2018ல் 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது. அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை நான் செலுத்தினேன்.
என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். எனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்புள்ளது.
எனவே, நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை லைகா நிறுவனம் தருமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை ஆர்பிஎல் வங்கியில் லைகா நிறுவனம் வைத்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விஷாலின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வருகிற 19ம் தேதிக்கு தள்ளி வைத்தது.