2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதால் அவ்வப்போது நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்தது, ஒவ்வொரு தொகுதிகளிலும் நூலகம் போன்றவற்றை அமைத்தார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அவரது மக்கள் இயக்கத்தினர் களத்தில் இறங்கி உதவினர்.
தற்போது தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று(டிச., 30) சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தார். விஜய் பின்னர் நெல்லையில் உள்ள மாதா மாளிகையில் 1500 குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
1500 குடும்பத்தினருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் புதிய உடைகளை அவர் வழங்கினார். மேலும் மழை வெள்ளத்தால் உயிரிழந்த குடும்பத்தினர் சிலருக்கு நிதி உதவியும் அளித்தார்.