இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் உடல் அஞ்சலிக்காக தேமுதிக., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரபலங்கள், திரையுலகினர், ரசிகர்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அரசியல், திரைப்பிரலங்கள் அஞ்சலி
புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன்,அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜய பாஸ்கர், ஏசி சண்முகம், சசிகலா, திக தலைவர் கீ.வீரமணி, அதிமுக., முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, வைகோ, திருமாவளவன், பாடலாசிரியர் வைரமுத்து, இயக்குனர்கள் எஸ்பி முத்துராமன், டி.ராஜேந்தர், ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் கவுண்டணி, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், விஜயகுமார், மாரி செல்வராஜ், கோவை சரளா, விக்னேஷ், லலிதா, அஜய் ரத்னம், கருணாஸ், ஷாம், கேஎஸ் ரவிக்குமார், அர்ஜூன், விமல், அபிராமி, நாசர், இளையராஜா, சத்யராஜ், கவுதமி, சவுந்தர்ராஜா, பிரேம், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள்பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

கண்ணீரில் தமிழகம்
விஜயகாந்த் உடலுக்கு எப்படியாவது அஞ்சலி செலுத்திவிட முடியாதா அல்லது அவரது முகத்தை காண முடியாதா என தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும், தேதிமுக அலுவலகம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கண்ணீர் துளிகளும், மக்களின் அழு குரலும் கேட்ட வண்ணம் இருக்கிறது. மேலும் அந்த பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது மற்ற ஊர்களிலும் உள்ள மக்களும் அந்தந்த பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.