குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அந்த படமும் சரி படத்தின் கதாபாத்திரங்களும் சரி ரொம்பவே 'ரா'வாக இருந்தது ரசிகர்களுக்கு பிடித்துப் போனது, படமும் வெற்றி பெற்றது. அடுத்து ஹிந்திக்கு சென்ற சந்தீப் அதே படத்தை கபீர் சிங் என்கிற பெயரில் ரீமேக் செய்து அங்கேயும் வெற்றி பெற்றார். சமீபத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அனிமல் என்கிற படம் இவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. அதே சமயம் இவரது படங்கள் பல விஷயங்களை துணிச்சலாக பேசுகிறது என்பதால் தொடர்ந்து விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்காவின் சகோதரரும் அனிமல் பட தயாரிப்பாளருமான பிரணாய் வங்கா கூறும்போது, “தெலுங்கு இயக்குனர்கள் சந்தீப் வங்காவின் கதைகளின் வீரியத்தை தாங்க முடியாமல், நீங்கள் தெலுங்குக்கு ஏற்ற ஆள் அல்ல.. பாலிவுட்டிலேயே தொடர்ந்து படம் பண்ணுங்கள் என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. அதேசமயம் யாரும் சொல்லத் துணியாத விஷயங்களை தைரியமாக சொல்வதால்தான் அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது என்பதையும் மறுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.