மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் |
மலையாள திரையுலகில் கடந்த 10 வருடங்களில் இயக்குனர் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி தொடர் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் விரும்பும் கூட்டணியாக மாறியுள்ளனர். சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளியான நேர் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் கொரோனா முதல் அலை ஆரம்பிப்பதற்கு முன்பாக இவர்கள் கூட்டணியில் ராம் என்கிற படம் துவங்கப்பட்டு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பும் நடைபெற துவங்கியது. பின்னர் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை மீண்டும் துவங்கப்படவில்லை.
அதற்கு பிறகு மோகன்லாலை வைத்தே இரண்டு படங்களை இயக்கி ரிலீஸ் செய்து விட்டார் ஜீத்து ஜோசப். இந்த நிலையில் ராம் படம் பற்றி அவர் கூறியபோது படத்தின் தயாரிப்பாளர்கள் தங்களது பொருளாதார சிக்கலை சரி செய்யும் வேலைகளில் இருக்கிறார்கள். நானும் என்னால் ஆன உதவிகளை மேற்கொண்டு வருகிறேன். அவர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தால் அடுத்த வருடம் படப்பிடிப்பு துவங்கிவிடும் என்றார்.
மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. படத்தின் பட்ஜெட் 140 கோடி என்பதும் இந்த படத்தை மீண்டும் தற்போது உடனடியாக துவக்குவதற்கான சிக்கலுக்கு காரணம். அதேசமயம் இந்த கதையை இரண்டு பாகங்களாக தான் சொல்ல முடியும். விரைவில் அனைத்தும் சரியாகி படப்பிடிப்பு துவங்கும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார். இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.