Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் : விஜயகாந்த்திற்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் இரங்கல்

28 டிச, 2023 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Politician,-cine-celebrities-condolence-to-Vijayakanth

நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சரத்குமார்

அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தொல் திருமாவளவன்
தேமுதிக தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகுந்த துயருற்றேன். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கும் தமிழ்நாடு அரசியலுக்கும் பேரிழப்பு. கேப்டன் அவர்களைப் பிறந்து வாடும் அவரது குடும்பத்தினர், கட்சி தோழர்கள், ரசிகர்கள், திரையுலகினர் ஆகிய அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
நடிகர், அமைச்சர் உதயநிதி
தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.

சிறந்த மனிதநேயர் - துணிச்சலுக்கு சொந்தக்காரர் - தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது அவருக்கும் , அவர் மீது கலைஞர் அவர்களுக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய நண்பர்.

நடிகர் சங்கத் தலைவராகவும் - எதிர்க்கட்சித் தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டன் அவர்களின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும் - அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மரணத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் - தே.மு.தி.க தொண்டர்கள் - நண்பர்கள் - திரையுலகினருக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

விக்ரம்
மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரது மறைவுச் செய்தி காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். உங்கள் பிரிவால் வருந்துகிறோம் கேப்டன்.

நடிகர், காங்கிரஸ் எம்பி. விஜய் வசந்த்
தே.மு.தி.க தலைவரும் தமிழ் திரையுலகின் கேப்டன் திரு. விஜயகாந்த் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் பாரதிராஜா
எனது நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இயக்குனர், நடிகர் சேரன்
வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன்.. இறப்பு செய்தி குறித்த எந்த வார்த்தைகளுமே உங்களுக்காக எழுத மனம் ஒவ்வவில்லை. வாழும் காலம் முழுதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள்... தீரா நோயிலிருந்து விடுதலை பெற்று போய் வாருங்கள்... வணங்குகிறேன்..

சாந்தனு பாக்யராஜ்
கேப்டன் நீங்கள் இனி இல்லை என்று அறிந்து உடைந்து போனேன், எனக்கு மிகவும் பிடித்தவர், நான் உங்களை மிஸ் செய்வேன்.. தமிழ்நாடு உங்களை மிஸ் செய்யும்...

தயாரிப்பாளர் தனஞ்செயன்
நெஞ்சை பதற வைக்கும் செய்தி. விஜயகாந்த் சார் திரைப்படத்துறையிலும் வெளியிலும் தனது உன்னதமான செயல்களுக்காக என்றென்றும் நினைவு கூறப்படும் ஒரு சிறந்த மனிதர். அவரது குடும்பத்தினருக்கும் அவரை நேசிக்கும் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவர் நம் நினைவில் நிலைத்திருப்பார்

நடிகர், தயாரிப்பாளர் நிதின் சத்யா
கேப்டன், சொர்க்கம் உங்களை வசதியாக வைத்திருக்கட்டும்

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
கேப்டன் விஜயகாந்த் எங்களுடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவருடைய கருணைக்கும், பெருந்தன்மைக்கும் எல்லையே இல்லை. நான் வளரும்போது அவருடைய திரைப்படங்களைப் பார்க்க விரும்பினேன். தேவைப்படும் அனைவருக்கும் உதவி செய்யும் அவரது மரபு என்றென்றும் நம் பாதைகளை ஒளிரச் செய்யும். திரைரையுலகம் இன்று அதன் கேப்டன்களில் ஒருவரை இழந்துவிட்டது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட மனிதனின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம்.. அவரது அனைத்து மகத்தான செயல்களுக்காக, எல்லாம் வல்ல இறைவன் அவரை மிகவும் மகிழ்ச்சியான இடத்தில் வைத்திருக்க வேண்டுகிறேன். அமைதியாக இருங்கள் அன்புள்ள கேப்டன். நீங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தீர்கள்.

இசையமைப்பாள் இமான்
ஈடுசெய்ய முடியாத கேப்டன் இப்போது இல்லை. ஒரு சிறந்த மனிதனை உலகம் நிச்சயமாக இழக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நிம்மதியாக ஓய்வெடுங்கள் சார்.

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்

நீங்கள், எனக்கு யார் என்று பலருக்குத் தெரியாது. நீங்கள் இல்லையென்றால் நான் ஒரு திரைப்பட ஆசிரியராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்திருப்பேன். சினிமா குறித்த எனது பார்வையையும் அணுகுமுறையையும் மாற்றிவிட்டீர்கள். உங்கள் நடுவே வைத்திருந்த இயக்குனரை எனக்குள் கொண்டுவர முயற்சி செய்தேன். கேப்டன் உங்களை பெருமைப்படுத்துவார், நீங்கள் விரும்பியது போல் வெற்றி பெற வைப்பார்.

நடிகர் கவுதம் கார்த்திக்
கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கனிவான இதயம் மற்றும் எப்போதும் பெருந்தன்மை... திரைத்துறை ஒரு அழகான ஆன்மாவை இழந்தது. குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நடிகர் அருண் விஜய்
கேப்டன் மனித குலத்திற்கு மாபெரும் இழப்பு. எல்லோர் மீதும் அக்கறை கொண்டவர். சுத்தமான தங்க இதயம் கொண்ட மனிதன். எங்கள் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. என்னுடைய தனிப்பட்ட வழிகாட்டி, திரையுலகில் அவரைப் பார்த்து வளர்ந்தவன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், பின்தொடர்பவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
சிம்பு
விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு என் இதயம் நொறுங்கியது. நிஜத்திலும், ரீலிலும் அவர் ஹீரோ. மற்றவர்களுக்கு எப்படியோ நான் அவரை என் சகோதரராக தான் என்றும் பார்த்தேன். என் ஆழ்ந்த இரங்கல்

மோகன்லால்

சிறந்த நடிகர், நேர்மையான அரசியல்வாதி, கனிவான மனிதர் விஜயகாந்த். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

சிவகுமார் இரங்கல் செய்தி
தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரை அடுத்து நம்பிக்கையான ஒரு தலைவராக உருவாகிக் கொண்டருந்தவர். ஆயிரக்கணக்கில் ரசிகர்களை மாதம் ஒருமுறை நேரில் சந்தித்ததை கோபி படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். தி.நகர் ரோகிணி லாட்ஜில் உள்ள தன் அறையில் நண்பர்களை தங்கவிட்டு படப்பிடிப்பு முடிந்து வந்து வெராண்டாவில் படுத்துக்கொள்வார். எளிமையானவர், நேர்மையானவர்.

நடிகர் சங்க தலைவராக அவர் இருந்த போது கமல், ரஜினியை மலேசிய கலைநிகழ்ச்சிக்கு நேரில் அழைக்கச்சென்று அவர்கள் கரம் பற்றி வேண்டிக்கொண்டவர். 'சாமந்திப்பூ' -படத்தில் சிறு வேடத்தில் என்னோடு நடித்தார். 'புதுயுகம்' - படத்தில் என் உயிர் நண்பனாக நடித்தார். கலையுலகம், அரசியல் உலகம் ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டது. சூர்யா, கார்த்தியுடன் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அரசியலில் நம்பிக்கையை உருவாக்கியவர் விஜயகாந்த் : கமல் இரங்கல்அரசியலில் நம்பிக்கையை ... அலை ஓசை உள்ள வரை உங்கள் நினைவோசை : விஜயகாந்திற்கு திரையுலகினர் இரங்கல் அலை ஓசை உள்ள வரை உங்கள் நினைவோசை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in