மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிறன்று நடந்தது. யு டியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் அதில் வெற்றி பெற்றார். நிகழ்ச்சி முடிந்து ஸ்டுடியோவை விட்டு அவர் வெளியில் வந்த போது, அவருடைய ரசிகர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரன்னர் அப் வின்னரின் கார், இதர போட்டியாளர்களின் கார்கள், அரசு பஸ்களை கடுமையாக சேதப்படுத்தினார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்லவி பிரசாந்த் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் காவல் துறை வழக்கு பதிவு செய்தது. நேற்று பல்லவி பிரசாந்த்தையும் அவரது தம்பி மகாவீர் என்பவரையும், தெலங்கானா, சித்திபேட் மாவட்டம் கொல்கூர் என்ற அவர்களது சொந்த ஊரில் ஐதராபாத், ஜுபிளி ஹில்ஸ் போலீசார் கைது செய்தனர்.
இறுதிப் போட்டி முடிந்து வெளியில் வந்த போது காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி பல்லவியும், அவரது ரசிகர்களும் வெற்றி ஊர்வலம் நடத்தியது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு டிவி நிகழ்ச்சியின் வின்னர் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




