கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி' படம் வந்த பிறகுதான் 'பான் இந்தியா' என்ற வார்த்தை பிரபலமானது. அதற்கு முன்பு அப்படி சில படங்கள் வந்தாலும் அவற்றைப் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை. 'பாகுபலி'யைத் தொடர்ந்து 'கேஜிஎப், புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் பான் இந்தியா படங்கள் என கொண்டாடப்பட்டு வசூலையும் குவித்தன.
'கேஜிஎப்' படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடித்துள்ள 'சலார்' படத்தை இயக்கியுள்ளார். பான் இந்தியா படமாக நாளை(டிச., 22) வெளியாக உள்ள இப்படம் குறித்தும், பான் இந்தியா படங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“ஒரு கதை எழுதி, அதைப் படமாக்கியுள்ளேன். 'சலார்' படம் பான் இந்தியா படமாக மாறுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அப்படி ஒன்று நடந்தால் அது எங்களுக்கு போனஸ் ஆக அமையும். 'கேஜிஎப்' படம் பான் இந்தியா படமாக மாறியது இயற்கையாக நடந்த ஒன்று. அப்படி நடக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெறும்.
பான் இந்தியா படம் என்பதை நீங்கள் திட்டமிட முடியாது. அப்படி சொல்லிவிட்டு, ஒவ்வொரு மொழியிலிருந்தும் நடிகர்களைக் கொண்டு வந்து இது ஒரு பான் இந்தியா படம் எனக் கூற முடியாது. அப்படி செய்தால் அது நடக்காது.
எனக்குள் ஒரு ஐடியா இருந்தது. ஆனால், அதற்கு பெரும் பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால், எனது முதல் படமாக 'உக்ரம்' படத்தை இயக்கினேன். பின்னர் 'கேஜிஎப்' படத்தை இயக்கினேன். அந்தப் படத்திற்காக சுமார் எட்டு ஆண்டுகள் செலவிட்டேன். கோவிட் வந்த போது இந்த 'சலார்' கதையை பிரபாஸிடம் சொன்னேன், அவரும் நடிக்க சம்மதித்தார்.
இந்தப் படம் இரண்டு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பையும், அவர்களது உணர்வுகளையும் சொல்லும் படமாக இருக்கும். அதில் வன்முறை எப்படி வந்தது என்பதும் படத்தின் கதை. பிரம்மாண்டப் படங்களில் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பிரபாஸ் ஒரு பெரும் நடிகர். 'பாகுபலி' படத்திற்குப் பின்பு அவர் இன்னும் பெரிய நடிகராக உயர்ந்தார். 'பாகுபலி' போன்ற ஒரு படத்தை மக்கள் மறக்க மாட்டார்கள். ஸ்டார்கள் எப்போதுமே ஸ்டார்கள்தான். அவர்கள் ஒரு பிளாப் அல்லது 20 பிளாப் கொடுத்தாலும், அவர்களுக்குத் தேவை ஒரே ஒரு ஹிட் தான். ஸ்டார் எப்போதுமே ஸ்டார் தான் என ஷாரூக்கான் நமக்கு நிரூபித்துள்ளார், அதை மறுக்கவும் முடியாது.
ஒரு படத்தை உருவாக்கியதற்குப் பிறகு அதன் வசூல் விவரங்களில் நான் தலையிடுவதில்லை. கொடுக்கப்பட்ட பட்ஜெட்டில் சரியான சமயத்தில் ஒரு படத்தைக் கொடுத்து முடிப்பதை மட்டுமே பார்ப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.
நாளை வெளியாக உள்ள 'சலார்' படம் பிரபாஸுக்கு 'பாகுபலி 2' போன்ற வெற்றியையும், இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு 'கேஜிஎப் 2' போன்ற வெற்றியையும் தருமா என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.