குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவரது அப்பா சுரேஷ் மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளர். நிறைய படங்களைத் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச புத்தக விழா ஒன்றில் அவர் பேசிய போது மலையாளத்தில் மம்முட்டி நடித்த 'ரோமாஞ்சனம்' மற்றும் தமிழில் விஜய் நடித்து வெற்றி பெற்ற 'லியோ' படங்களைப் பற்றி இளம் சினிமா ரசிகர்களிடம் பேசினார்.
“உங்களின் மைன்ட் செட் மாறிவிட்டது. நீங்கள் லோகேஷ் கனகராஜையும், நெல்சனையும் பாலோ செய்கிறீர்கள். 'ரோமாஞ்சனம்' சினிமாவும் எனக்கு சிறந்த படமாக தோணவில்லை. அந்தப் படம் மோசமான படம் என நான் சொல்லவில்லை, ஆனால், எனக்குப் பிடிக்கவில்லை. அதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும். நான் ஒரு பழைய ஆள். இப்போது யாராவது என்னிடம் வந்து கதை சொன்னாலும் அது எனக்கு குழப்பமாக இருக்கும். எனது மகளைக் கேட்கச் சொல்வேன். இங்கு தமிழ் சினிமாவுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளார்கள்.
சமீபத்தில் 'லியோ' படம் பார்த்தேன். அது எனக்கு பெரிய படமாகத் தோன்றவில்லை. கிளைமாக்ஸ்ல 200 பேரை ஹீரோ அடிக்கிற சம்பவத்தை சூப்பர் மேன் தான் பண்ண முடியும். ஆனால், அது உங்களுக்குப் பிடிச்சிருக்கு,” என அவர் மனதில் பட்டதை யதார்த்தமாகப் பேசியிருந்தார்.
இருப்பினும் அவர் எப்படி 'லியோ' படத்தைக் குறை சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். விஜய்யுடன் ஜோடி சேர்ந்து 'சர்க்கார், பைரவா' படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் அப்பா இப்படி பேசியிருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
'லியோ' படத்திற்கே இப்படி விமர்சித்திருக்கிறாரே அவரது மகள் நடித்த 'பைரவா' படத்தை அவர் பார்க்கவில்லையோ என்ற கேள்வியும் கூடவே வருகிறது.