அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் அவரது காதலருடன் லிவிங் டு கெதர் ஆக வசித்து வருகிறார். அவர் நடித்துள்ள 'சலார்' படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
சமீபத்திய வீடியோ பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு காலத்தில் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் பற்றி ஓபன் ஆகப் பேசியுள்ளார். “நான் கடந்த எட்டு ஆண்டுகளாக தெளிவாக இருக்கிறேன். நீங்கள் குடிக்காத போது பார்ட்டிகளில் மற்றவர்களைப் பொறுத்துக் கொள்வது கடினம். எனக்கு நிதானமாக இருப்பதுதான் சிறந்தது. இது ஒரு கட்டமாக இருக்கலாம், அல்லது உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கலாம்.
நான் போதைப் பொருட்களுக்கு ஒரு போதும் அடிமையானதில்லை. ஆனால், மது எனது வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயமாக இருந்தது. அது எனக்கு எந்த விதத்திலும் பாசிட்டிவ்வாக அமைந்ததில்லை. நான் எப்போதும் மது மயக்கத்தில் இருந்தேன், எனது நண்பர்களுடன் குடிக்க விரும்பினேன். பின்னர் அப்படிப்பட்ட நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க ஆரம்பித்தேன்,” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதிஹாசனின் அந்த வீடியோ பேட்டி பல்வேறு விதமான செய்திகளாகப் பரவி, அதை வைத்து அவரை 'டிரோல்' செய்து வைத்தார்கள். அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக, “எனது தெளிவைப் பற்றிப் பேசும் கட்டுரைகளால் என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலனளிக்காது. கடவுள் கனிவானவர், வாழ்க்கை நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வெளியீட்டிற்கு முன்பாகவும் உண்மையற்ற எந்த எதிர்மறை வந்தாலும் அதைமாற்ற முடியாது,” என்று பதிவிட்டுள்ளார்.