தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

2024ம் ஆண்டின் பொங்கல் வெளியீடாக “அயலான், அரண்மனை 4, கேப்டன் மில்லர், லால் சலாம்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'அரண்மனை 4' பற்றி அதன்பின் எந்த சத்தமும் கேட்கவில்லை. ஜனவரி 26ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தங்கலான்' படம் தள்ளிப் போகலாம் என ஒரு தகவல் வந்துள்ளது. அப்படி அந்தப் படம் தள்ளிப் போனால், பொங்கல் போட்டியிலிருந்து ஏதாவது ஒரு படம் விலகி, ஜனவரி 26க்கு மாற வாய்ப்புள்ளது.
'அயலான்' படத்திற்கான வியாபாரம் எதிர்பார்ப்பை விடவும் அதிகமாக நடந்துள்ளதாகத் தகவல். 'கேப்டன் மில்லர், லால் சலாம்' ஆகியவற்றின் வியாபாரம் இன்னமும் நடந்து வருகிறதாம். 'அரண்மனை 4' படம் பொங்கல் போட்டியிலிருந்து நிச்சயம் விலகும் என்கிறார்கள். அதோடு சேர்ந்து 'கேப்டன் மில்லர்' அல்லது 'லால் சலாம்' ஆகிய படங்களில் ஏதாவது ஒன்று விலகுமா அல்லது போட்டி போடுமா என்பது அடுத்த வாரத்தில் தெரிய வாய்ப்புள்ளது.
2024ல் பல பெரிய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளதால் அடுத்த வருட வெளியீட்டை தயாரிப்பாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் எழுந்துள்ளது.