2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை | தாதாவுடன் பார்ட்டியில் கலந்து கொண்டேனா? - பிரயாகா மார்டின் விளக்கம் |
வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தை முடிந்ததும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171 வது படத்தில் நடிக்கப் போகிறார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் பணியில் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், சில மாதங்களுக்கு சோசியல் மீடியாவில் இருந்து தான் வெளியேறப் போவதாக லோகேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ உள்ளிட்ட சில படங்களில் அவருடன் திரைக்கதை வசனம் எழுதுவதில் உதவியாளராக பணியாற்றி வந்த இயக்குனர் ரத்னகுமார், ரஜினி 171-வது படத்தில் இடம் பெறவில்லை. ரத்னகுமார் தனது அடுத்த படத்திற்கான இயக்கத்தில் உள்ளதால் ரஜினி 171ல் பணியாற்றவில்லை என லோகேஷ் கூறினார்.
இதனிடையே விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய ரத்னகுமார், காக்கா - கழுகு கதை குறித்து பேசினார். அதையடுத்து ரஜினியை கருத்தில் கொண்டு தான் அவர் இப்படி பேசியதாக ரஜினி ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இதன் காரணமாக, அப்போது சோசியல் மீடியாவில் இருந்தே வெளியேறினார் ரத்னகுமார்.
இப்படியான நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினி நடிப்பதால் அந்த படத்தில் இயக்குனர் ரத்னகுமார் பணியாற்றினால் அது சரிவராது என்பதால் அவர் பணியாற்றவில்லை என்கிறார்கள்.