ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் | ‛காந்த கண்ணழகி' பெயர் சில்க் ஸ்மிதாவிற்கு தான் பொருந்தும்... - கனவாய் கலைந்து போன கவர்ச்சி தாரகை | பிளாஷ்பேக்: வேஷமிட்டு வாய்ப்பைப் பெற்ற ஜெமினிகணேசன் | டிசம்பர் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான் ; உற்சாகத்தில் ராஷ்மிகா |
அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் நடித்த 'பார்க்கிங்' படம் கடந்த 1ம் தேதி வெளிவந்தது. படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி தயாரித்துள்ளது. ஒரே காம்பவுண்டில் வசிக்கும் இருவருக்கு இடையில் கார் பார்க்கிங் தொடர்பாக வரும் ஈகோ மோதலை பற்றிய படம்.
ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தங்க காப்பு அணிவித்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு நன்றி. பார்வையாளர்களை தியேட்டரில் நேரில் சந்தித்தோம். இந்தப் படத்தை எல்லோரும் கொண்டாடினார்கள். இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இது நிச்சயம் இருக்கும் என பலரும் சொன்னார்கள். நீங்கள் கொடுத்த அன்பால்தான் இங்கு நிற்கிறோம். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் சினிஸ், சுதன் இவர்களுக்கும் நன்றி. வெற்றி இயக்குநர் பட்டியலில் ராம் நிச்சயம் இருப்பார்.
படத்தில் வேலை பார்த்த எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, பிரார்த்தனா அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி சந்தோஷத்தையும் தாண்டி பயத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளது. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், என்னுடைய ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பொறுப்பு கூடியுள்ளது. என்றார்.
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசியதாவது: வெள்ளம், மழை என நிறைய இடையூறுகள் இருந்தாலும் இந்தப் படத்திற்கு மக்கள் நிறைய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்குமே நன்றி. என்றார்.