நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
கேஜிஎப், காந்தாரா மற்றும் சலார் படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்தபடம் 'பஹீரா'. ஸ்ரீ முரளி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். சூரி இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க, அஜ்னீஷ் இசையமைத்திருக்கிறார்.
நாயகன் முரளிஸ்ரீயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் தயாராகும் இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. கேஜிஎப் மற்றும் சலார் பாணியிலான சூப்பர் ஆக்ஷன் ஹீரோ படமாக தயாராகி உள்ளது. படம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'சப்த சாகரடாச்சே எலோ' (ஏழு கடல்களுக்கு அப்பால்) படத்தில் நடித்து புகழ்பெற்ற ருக்மணி வசந்த் இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நடிகை ஆகிறார்.