ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
பொதுவாக பிரபல ஹீரோக்களின் படங்கள் வெளியாகும்போது அதிகாலை காட்சிகள் திரையிடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. மற்ற மாநிலங்களில் இது குறித்து பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்றாலும் தமிழகத்தில் தொடர்ந்து மாறி மாறி நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் கேரளாவில் 5 மணிக்கு திரையிடப்பட்டு வந்த அதிகாலை காட்சிகளை விரைவில் வெளியாக இருக்கும் சலார் படத்திற்காக அதிகாலை 12:30 மணிக்கே திரையிட இருக்கிறார்கள். இதற்காக ரசிகர் மன்றங்கள் இப்போதே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய துவங்கி விட்டன.
இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் மட்டுமல்ல, மலையாள நடிகர் பிரித்விராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் கேரளாவில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காக இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்த படத்தை கேரளாவில் பிரித்விராஜின் சொந்த நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் தான் வெளியிட இருக்கிறது,, அந்தவகையில் தற்போதிருந்தே இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை கேரள ரசிகர்கள் துவங்கி விட்டார்கள் என்று சொல்லலாம். இந்தப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது