கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
கன்னட நடிகர் யஷ் நடித்த கே.ஜி.எப் படங்கள் அவரை இந்திய அளவில் பிரபலமாக்கியது. அவர் படம் வெளியாகி ஒரு வருடத்தை கடந்த நிலையில் இன்று தனது அடுத்த படமான யஷ் 19வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு 'டாக்சிக்' என தலைப்பு வைத்துள்ளனர். அதன் உடன் டேக்லைனாக டாக்சிக் - எ பேரி டேல் பார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) என குறிப்பிட்டுள்ளனர். கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.
கீது மோகன்தாஸ் கூறுகையில், ‛‛இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும். யஷ் உடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யஷ். அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் மகிழ்ச்சி'' என்றார்.
கூடுதலாக இத்திரைப்படம் 10.04.2025 திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர். விரைவில் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என்கிறார்கள்.