பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை | அன்று ஹர்பஜன் சிங்... இன்று சுரேஷ் ரெய்னா : தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்புவாரா மட்டை வீரர்! | வெப் தொடர் இயக்க தயங்கிய ரேவதி | சிரஞ்சீவியுடன் கவர்ச்சி ஆட்டம் போடும் மவுனி ராய் | பிளாஷ்பேக்: ஜெய்சங்கர் வீட்டில் வேலை பார்த்த நடிகர் | பிளாஷ்பேக்: சினிமாவான துப்பறியும் நாவல் | பிரியதர்ஷன், அக்ஷய் குமார் படத்தில் விலகிய நடிகர் மீண்டும் இணைந்தார் | மம்முட்டியை விட கிரேஸ் ஆண்டனிக்கு கதை சொல்ல தான் அதிக நேரம் பிடித்தது : இயக்குனர் ராம் |
தமிழ்நாட்டில் பிறந்து, மலையாளத்தில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி. அடுத்து கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். அதுவும் முதல் படமாக கன்னட சினிமாவின் வசூல் மன்னன் யஷ் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை மலையாள நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இந்த படத்தை இயக்க உள்ளார்.
இந்த படம் கோவாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேங்ஸ்டர் கதை என்று சொல்லப்படுகிறது. கன்னடத்தில் தயாரானாலும் பான் இந்தியா படமாக உருவாகிறது. படம் பற்றிய விரிவான அறிவிப்புகள் நாளை (8ம் தேதி) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.