தயாரிப்பு நிறுவனம் துவக்கம்: திருப்பதியில் கெனிஷாவுடன் ரவிமோகன் சாமி தரிசனம் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் போலீஸ் அதிகாரிகளாக நடித்த சிவாஜியும், பிரபுவும் | பிளாஷ்பேக்: மாப்பிள்ளையை வெற்றி பெற வைத்த சர்க்கஸ் காட்சிகள் | அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில், 'பகிரக்கூடாத ஒப்பந்தம்' | 500 கோடி வசூலில் 'கூலி' | சச்சின் டெண்டுல்கர் ரசித்துப் பார்த்த '3பிஹெச்கே' | மீண்டும் இணைந்த பிரபுதேவா, வடிவேலு | சமந்தாவின் ‛மா இண்டி பங்காரம்' எப்போது துவங்குகிறது | ‛கேஜிஎப்' நடிகர் தினேஷ் மங்களூரு மறைவு | அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் |
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களில் இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்யாணி கதாநாயகியாக நடித்துள்ள ஆண்டனி என்கிற திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை மலையாள சினிமாவின் சீனியர் முன்னணி இயக்குனரான ஜோஷி இயக்கியுள்ளார்.
இதில் ஒரு கல்லூரி மாணவியாக அதேசமயம் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையைக் கற்ற ஒரு இளம் பெண்ணாக நடித்துள்ளார் கல்யாணி. படத்தில் இவருக்கு சண்டைக் காட்சிகளும் உள்ளன. இந்த படத்தில் தான் வாங்கிய குத்துகள், உதைகள், ரத்தக்காயங்கள், தான் விட்ட கண்ணீர், அது மட்டுமல்ல தனது புன்னகை எல்லாமே நிஜம்தான் என்று தற்போது கூறியுள்ளார் கல்யாணி.
“எப்போதுமே ஒரு வசதியான சூழலுக்குள் நம்மை வைத்துக் கொள்ளுவது வளர்ச்சிக்கு உதவாது என்பதை தாமதமாகத் தான் புரிந்து கொண்டேன். படத்தில் என்னுடைய சண்டைக் காட்சிகளின் போது உங்களுடைய ஆரவார கூச்சலும் கைதட்டல்களும் என்னை இன்னும் உற்சாகப்படுத்துகின்றன” என்று கூறியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.