ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இந்தியாவின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஏற்கெனவே நடிகையாக அறிமுகமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது இளைய மகள் குஷி கபூர் தற்போது 'த ஆர்ச்சிஸ்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். சோயா அக்தர் இயக்கத்தில் அகஸ்திய நந்தா, குஷி கபூர், சுஹானா கான், வேதாங் ரைனா மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஷாரூக்கின் மகள் சுஹானா கான் கூட இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். அமிதாப்பின் பேரன் அகஸ்திய நந்தா நடிகராக அறிமுமாகிறார்.
இப்படி முக்கியமான வாரிசு அறிமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் பிரிமீயர் காட்சி மும்பையில் நடைபெற்றது. ஷாரூக்கான், கஜோல், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் அவரவர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் குஷி கபூர் அவருடைய அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய நீள கவுன் ஒன்றை அணிந்து வந்தார். 2013ம் ஆண்டு நடைபெற்ற இபா விருது நிகழ்வில் அந்த கவுனை அணிந்திருந்தார் ஸ்ரீதேவி. அம்மாவைப் போலவே மகளும் அந்த ஆடையில் அழகாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.