‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
2006ம் ஆண்டு சுஹாசினி நடிப்பில் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்ற தெலுங்கு படம் 'அம்மா செப்பினிடி'. இந்த படத்தில் சர்வானந்த் ஹீரோ. அவரது அம்மாவாக சுஹாசினி நடித்திருந்தார். இவர்களுடன் ஸ்ரேயா ரெட்டி, பவன் மல்கோத்ரா, நாகேந்திர பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கங்கராஜு குன்னம் இயக்கி இருந்தார்.
சுஹாசினியின் கணவர் பவன் மல்கோத்ரா புகழ்பெற்ற ராக்கெட் விஞ்ஞானி. அவரது மகன் சர்வானந்த் 25 வயதாகியும் மனவளர்ச்சி இல்லாத குழந்தை போன்றவர். இவர்கள் குடும்பம் ராக்கெட் தளத்தை ஒட்டிய காலனியில் வசித்து வருகிறது. இந்திய விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் ஒன்று அங்கு நடக்க இருகிறது. இந்த கூட்டத்தில் புகுந்து அனைவரையும் அழிக்க திட்டமிடுகிறது ஐஎஸ்ஐ அமைப்பு. இதனை சுஹாசினி தனது மகனை வைத்து எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் 17 வருடங்களுக்கு பிறகு நெட்பிளிஸ் ஓடிடி தளத்தில் நாளை (30ம் தேதி) வெளியாகிறது.