பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் | ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா | பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் |

ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்தவர் விக்ரமின் மகன் துருவ். அடுத்து இவர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. ஏற்கனவே சில இசை ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார் துருவ். தற்போது அவர் தெலுங்கில் நானி நடித்துள்ள ஹாய் நான்னா என்ற படத்தில் வரும் ஓடியம்மா என்ற பார்டி பாடலை நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பாடியிருக்கிறார். இவர்களுடன் பாடகி சின்மயி-யும் இணைந்து பாடி உள்ளார். தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நானியுடன் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடித்துள்ளார்.