நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் | பிளாஷ்பேக்: நடிகர் முத்துராமனின் திரைப்பயணத்திற்கு திருப்புமுனையாய் அமைந்த “நெஞ்சில் ஓர் ஆலயம்” | தெலுங்கில் குத்தாட்டம் போட்ட சான்வி மேக்னா | 'தெறி' ரீரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு |

அறிமுக இயக்குனர் அருள்செழியன் இயக்கத்தில், அந்தோணிதாசன் இசையமைப்பில், யோகிபாபு, விதார்த் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'குய்கோ'. இப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் மிகவும் பாராட்டினர். படத்திற்கான விமர்சனங்களும் பாராட்டும்படியே வந்தது.
ஆனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வேலையை சரியாகச் செய்யவில்லை. கடந்த வாரம் 24ம் தேதி வெளியான இப்படத்தின் வெளியீடு பற்றிய அறிவிப்பை அதற்கு சில நாட்களுக்கு முன்பு 21ம் தேதிதான் வெளியிட்டார்கள். இப்படி ஒரு படம் வந்தது பலருக்கும் தெரியவில்லை. தமிழகத்தின் பல முக்கிய ஊர்களில் கூட இப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தின் இயக்குனரான அருள்செழியன் நேற்று அவரது பேஸ்புக்கில், “குய்கோ திரைப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி...
ரசிகர்களின் ஆதரவு இருந்தும், பாராட்டுகள் குவிந்தும் குய்கோவை தயாரித்த நிறுவனத்தினர் அதை வலுக்கட்டாயமாக 'பீரிசர் பாக்சில்' வைத்து ஆணி அடித்து, உயிரோடு அஞ்சலிக்கு வைத்து விட்டார்கள்..
'குய்கோ'விற்கு என் வீர வணக்கம்..
பிகு : துணை நின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றி பதிவு மூன்றாம் நாள் காரியம் முடிந்ததும் வெளியிடப்படும். . …,” என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.