தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவக் கதையா ராதிகாவின் ‛காலனி' | பாடகி ஆஷா போஸ்லே உடல் அரசு மரியாதையுடன் தகனம் | ஜனநாயகன் லீக் ; எடிட்டர் காரணமா... குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் : ஆர்கே செல்வமணி பேட்டி | உங்களுக்கு வந்தால் ரத்தம்.. எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? நயன்தாரா மீது எழும் விமர்சனங்கள் | ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து? கமல் மீது கடும் கோபத்தில் ரஜினி ரசிகர்கள்? | ராஜன் வகையறா படப்பிடிப்பு தொடங்கியது | லீடர், காளிதாஸ் 2, ஹாப்பி ராஜ் படங்கள் மற்றும் கடந்த வார படங்களின் நிலை என்ன? | படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா வேணாம் : மிஸ்டர் எக்ஸ் இயக்குனரின் புதுப்பிரச்சாம் | மாஸ்டர் 2..., லியோ 2... உருவாகிறதா... : மீண்டும் நடிக்கிறாரா விஜய்...? | பிரசாந்த், ஹரி கூட்டணியின் படம் என்னாச்சு |

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் ஜெயம் ரவியை வைத்து இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் மோகன் ராஜா. அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்தநிலையில் தற்போது மோகன் ராஜா வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி, அசின், நதியா நடிப்பில் தான் இயக்கிய எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தையும் அடுத்து இயக்கப் போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அதோடு அப்படத்தின் முதல் பாகத்தில் நதியா கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இல்லாமல் கதை தொடரும் என்றும் கூறும் மோகன் ராஜா, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை அடுத்து, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.




