சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் லால் சலாம். பொங்கலுக்கு திரைக்கு வரும் இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் நடித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான கபில்தேவ் தற்போது தனக்கான டப்பிங்கை பேசி முடித்திருக்கிறார். இது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. மேலும், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் லால் சலாம் படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார். அவருடன் பணியாற்றியது மிகப்பெரிய அனுபவம். நீங்கள் உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த கேப்டன் என்றும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா.