23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி |
பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்து வந்த படம் 'வணங்கான்'. ஒரு சில காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் நடிகர் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து அதே படத்தை தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் அருண் விஜய்யின் ஒரு கையில் விநாயகர் மற்றொரு கையில் பெரியார் இடம் பெற்ற போஸ்டர் வெளியாகி சலசலப்பை உருவாக்கியது. இந்த நிலையில் இன்று நடிகர் அருண் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வணங்கான் படக்குழு சார்பாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.