அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
கார்த்தி நடித்த ஜப்பான் படம் தீபாவளிக்கு வெளியான நிலையில் அந்த படம் வரவேற்பை பெறவில்லை. தற்போது அவரது 27வது படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கும்பகோணத்தில் தொடங்கியுள்ளது. மொத்தம் ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதி - திரிஷா நடித்த 96 என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்குகிறார். கார்த்தி உடன் அரவிந்த்சாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படத்தைப் போலவே இந்த படத்திலும் அவருக்கு ஜோடி இல்லை. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திலும் ஏற்கனவே பிரேம் குமார் இயக்கிய 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு செய்த மகேந்திரன் ஜெயராஜ் ஆகியோர் இணைந்துள்ளார்கள். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.