'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
கடந்த இரண்டு வருடங்களாகவே மலையாளத்தில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதுடன் ஐம்பது கோடிகளை தாண்டி வசூலித்து ஆச்சரியப்படுத்தியும் வருகின்றன. அந்த வகையில் 2018, ஆர்டிஎக்ஸ் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள பீனிக்ஸ் திரைப்படமும் வெளியான முதல் நாளே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஹாரர் ரொமான்டிக் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு பரதன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் நடித்திருப்பவர்களில் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் தவிர மற்றபடி அனைவருமே வளர்ந்து வரும் நடிகர்கள் தான். அதேசமயம் அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இந்த படத்திற்கு கதை எழுதியுள்ளார் என்பதால் ரிலீஸுக்கு முன்பே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ஓரளவுக்கு இருந்தது.
அதை தக்க வைக்கும் விதமாக தற்போது படம் வெற்றியைப் பெற்றுள்ளது. படம் பார்த்த அனைவருமே பொதுவெளியிலும் சோசியல் மீடியாவிலும் படம் குறித்து பாசிட்டிவான கருத்துக்களையே கூறி வருகின்றனர் என்பதால் இந்த படமும் 50 கோடி வசூல் கிளப்பில் இன்னும் சில தினங்களில் இணையும் என எதிர்பார்க்கலாம்.