ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
திருச்சூர்: நடிகர் கலாபவன் மணி மரண விவகாரத்தில் திடீர் திருப்பமாக அளவுக்கு அதிகமாக அவர் பீர் குடித்ததே மரணத்திற்கு காரணம் என விசாரணை அதிகாரி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழில் ‛ஜெமினி', ‛மறுமலர்ச்சி', ஜே.ஜே., உனக்கும் எனக்கும், வாஞ்சிநாதன், குத்து, எந்திரன், மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் கலாபவன் மணி, 46. கடந்த 2016-ம் ஆண்டு திருச்சூர் , சாலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் ரத்த வாந்தி எடுத்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.
திருச்சூர் அரசு மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை நடத்தியதில், அவரது ரத்தத்தில் எத்தனால், மெத்தனால் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் கலாபவன் மணியின் மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து 2019-ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் விசாரித்த ஐ.பி.எஸ். அதிகாரி உன்னிராஜன் கூறியது,
கலாபவன் மணி பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் 10 முதல் 12 பாட்டீல் வரை பீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 2016 ம் ஆண்டு மரணமடைவதற்கு முன் 10 பாட்டீல் பீர் குடித்ததில் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரத்த வாந்தி எடுத்த நிலையில் மேலும் பீர் குடித்ததால் ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவு இருந்தது பிரேதபரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் மரணமடைந்தார் என்றார்.