'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' |
இந்தியன்-2 படத்தை அடுத்து, கல்கி 2898 ஏடி, தக் லைப், எச்.வினோத் இயக்கும் படம் என 3 படங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன். இந்த படங்களின் அப்டேட்டுகள் நேற்று அவரது 69வது பிறந்தநாளில் வெளியாகின. மேலும் பிறந்த நாளையொட்டி திரை உலக நண்பர்கள், மீடியா நண்பர்களுக்கு ஒரு ராஜ விருந்து கொடுத்தார் கமல்ஹாசன். இந்த விருந்து நிகழ்ச்சியில் நண்பர்களுடன் அமர்ந்து அவரும் உணவருந்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிலையில் கமல்ஹாசனை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், லியோ தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் நேரில் சென்று தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இது குறித்த புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.