காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
எப்போதும் துணிச்சலுடன் கருத்துகளை வெளியிடுகிறவர் கங்கனா ரணாவத். அவர் வெளியிடும் கருத்துகள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கருத்துகளோடு ஒத்து போவதால் அவரை பா.ஜ.,வின் ஆதரவாளர் என்ற கருத்தும் உண்டு. அதோடு மஹாராஷ்ராவில் ஆளும் சிவசேனா கட்சி மீது துணிச்சலான விமர்சனங்களை முன்வைத்தவர். மும்பைக்குள் நுழைய விட மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் மிரட்டியபோது அதை மீறி கெத்தாக வந்து இறங்கியவர்.
இந்த நிலையில் வருகிற பார்லிமென்ட் தேர்தலில் அவர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் கடந்த தேர்தலின்போதே அவரை தேர்தலில் நிறுத்த பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. அவர்தான் பிடிவாதமாக மறுத்து விட்டார். ஆனால் இந்த முறை போட்டியிடும் எண்ணத்தில் இருக்கிறார். அதனை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
குஜராத்தில் உள்ள சோமநாத் கோயிலுக்குச் சென்ற அவர் அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கு அவரை சந்தித்த செய்தியாளர்கள் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டனர். அதற்கு அவர் “கிருஷ்ணர் அருள் புரிந்தால் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்” என்று பதிலளித்தார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் “பா.ஜ., அரசின் முயற்சியால் 600 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு மகத்தான நாளை காணப் போகிறோம். கொண்டாட்டங்களுடன் கோயில் திறப்பு விழா நடைபெறும். சனாதன தர்மத்தின் கொடி உலகம் முழுவதும் பறக்க வேண்டும். துவாரகை ஒரு தெய்வீக நகரம். இங்குள்ள அனைத்தும் அற்புதம். ஒவ்வொரு துகளிலும் கிருஷ்ணர் இருக்கிறார். அவரைக் காணும்போது நான் ஆசீர்வதிக்கப்படுகிறேன். இறைவனை தரிசனம் செய்ய நான் எப்போதும் இங்கு வர விரும்புகிறேன், என்றார். கங்கனா அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.