ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தசெ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா, லிஜோ மோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து 2021ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி வெளிவந்த படம் 'ஜெய்பீம்'. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவான அப்படம் ஓடிடியில் வெளியானது. ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றது.
அப்படத்தில் காவல் துறையினரின் கொடுமைக்கு ஆளாகும் விளிம்பு நிலை குடும்பம் ஒன்றின் கதையை உணர்வுபூர்வமாகக் கொடுத்திருந்தார்கள். அதன் பின் அம்மக்களுக்கு அரசு தரப்பிலிருந்தும் உதவிகள் செய்யப்படுவது அதிகமானது.
நேற்று இப்படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அது பற்றி எக்ஸ் தளத்தில் நடிகர் சூர்யா அரசு வழங்கியுள்ள உதவிகள் குறித்த பட்டியல் ஒன்றைப் பதிவிட்டு தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்,” என அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.