கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் | இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் |
தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் டீசர், டிரைலர்கள் மட்டுமல்லாது அடுத்த வருடம் வெளியாகும் படங்களின் டீசர், டிரைலர்களையும் இப்போதே வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். அந்த விதத்தில் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வரும் 'ஜப்பான்' படத்தின் டிரைலர் அக்டோபர் 28ம் தேதி யு டியூபில் வெளியானது. விக்ரம் நடித்து அடுத்த வருடம் ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ள 'தங்கலான்' படத்தின் டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியானது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இருப்பினும் முதலில் வெளியான 'ஜப்பான்' டிரைலரைக் காட்டிலும் பின்னர் வெளியான 'தங்கலான்' டீசருக்கு ரசிகர்களிடம் கொஞ்சம் கூடுதலான வரவேற்பு இருக்கிறது. 'ஜப்பான்' டிரைலர் இதுவரையிலும் 52 லட்சம் பார்வைகளையும், 'தங்கலான்' டீசர் இதுவரையிலும் 66 லட்சம் பார்வைகளையும் யு டியுபில் பெற்றுள்ளது. 'தங்கலான்' யு டியுப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும், 'ஜப்பான்' 17வது இடத்திலும் உள்ளது.
இரண்டு படங்களுக்குமே இசை ஜிவி பிரகாஷ்குமார். இரண்டு படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வேறு வேறாக இருந்தாலும் இருவருமே நடிகர் சூர்யாவின் உறவினர்கள். இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இரண்டு படங்களையும் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.