பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? | மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் | பிளாஷ்பேக்: சர்ச்சையில் சிக்கிய 'மனிதன்' |
மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் வரதராஜ் தயாரித்துள்ள படம் 'சைத்ரா'. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெய்யப்பன் இசையமைத்துள்ளார். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது.
இயக்குனர் ஜெனித்குமார் கூறும்போது, “24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. பீட்சா, டிமாண்டி காலனி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இதுவரை யாரும் பார்த்திராத பரபரப்பான சம்பவங்களுடன் முழுக்க முழுக்க திரில்லர் கலந்த ஹாரர் படம் இது. படப்பிடிப்பு முழுவதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் கிணறு பகுதியில் நடந்தது. யாஷிகா தான் படத்தின் சோலோ ஹீரோயின். அவரை சுற்றித்தான் கதை நடக்கிறது. இந்த படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.