மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 19ம் தேதி திரைக்கு வந்துள்ள திரைப்படம் ‛லியோ'. படம் ரிலீஸிற்கு முன்பிலிருந்து ரிலீஸிற்கு பின்பும் பல சர்ச்சைகளை சந்தித்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் ரூ.500 கோடி வசூலை கடந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் விழா ரத்தானது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவை இதே அரங்கில் நாளை நவ., 1ல் நடத்துகின்றனர். இதில் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் தயாரிப்பாளர் மனு அளித்த நிலையில் கடும் நிபந்தனைகளுடன் விழாவை நடத்த நேற்று அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு வருவோர், 4 மணி முதல் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 11 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கு வருவோர் வாகனங்களை உரிய பார்க்கிங் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் அனுமதி பாஸ் உடன் ரசிகர் மன்ற அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும். இவை இருந்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு டேக்
'லியோ' படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன. பாஸ் வைத்திருக்கும் ரசிகர்கள், அவர்களின் ஆதார் அட்டையை காண்பித்தால் மட்டுமே விழாவிற்கு அனுமதிக்கபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி டேக்கை புஸ்ஸி ஆனந்த் வழங்கியுள்ளார். இந்த டேக்கில் நண்பா, நண்பி என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டுள்ளன. அதேசமயம் இந்த டேக் மற்ற ரசிகர்களுக்கு கிடைக்காது என தெரிகிறது. முழுக்க முழுக்க மக்கள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என்றே தெரிகிறது.